4/14/10

தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

கவிதை தொகுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட
கவிதைகள்,

காதலுடனான மொழிப்போர்,
நேசிச்கப்படுவதற்கான பேராசைகள்,
அந்தரங்கத்தின் அம்மணம்,
தனிமையின் ராக் இசை,
பிரிவின் குறுக்கு வெட்டு தோற்றம்,
புரிந்து கொள்ள படாததின் கலகம்,
நெற்றிகன்னுக்கு கரி பூசும் நக்கீர சாம்பல்,
கவிதை மனதின் கசடு,

சாகபோகும் பணக்கார கிழவனின்
பதின் வயது தத்து பிள்ளை.

கவிதை தொகுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படாத
கவிதைகள்,

புது நாத்திகனின் மறுக்கப்பட்ட பழைய தெய்வங்கள்,
போதும் என்று சொன்ன காதலிக்கான முத்தம்,
குழந்தை மீதம் வைத்த உணவு,
கேலிகளை தவிர்க்கும் நாகரிகம்,
எல்லை கோடுகள் போட்ட மனிதனின் கோமாளித்தனம்,
மன குரங்கு விட்டு தாவிவிட்ட ஒரு கிளை,
பிடித்து,பிடிக்காமல் போனவர்கள் மீதான வன்முறை,

சாகபோகும் பணக்கார கிழவனின்
செத்து போன
பதின் வயது தத்து பிள்ளை.

-- ஜெயசீலன்.ப

1 comment:

 1. நேசிச்கப்படுவதற்கான பேராசைகள்,
  ....
  சாகபோகும் பணக்கார கிழவனின்
  பதின் வயது தத்து பிள்ளை.
  ....
  போதும் என்று சொன்ன காதலிக்கான
  ...
  முத்தம்,கேலிகளை தவிர்க்கும் நாகரிகம்,

  Marvels... Very Nice

  ReplyDelete