4/21/10

பேசும் நீ................

ரயிலடி ஓசைக்கு
பழகிய தண்டவாளம் போல்
உன் பேச்சுக்கு பழகி போனேன்...
உன் பேச்சின் சாளரத்தில் நீள்கிறேன்,
அதன் இடைவெளியில் குறைகிறேன்...
தீரும் போன்றதொரு
புள்ளியில் தீராமல்
நீள்கிறாய்...
முடிந்தது போன்றதொரு
தருவாயில் புது வாயில்
திறக்கிறாய்...
நடந்ததை சொல்லுகிறாய்
நடந்த,நடக்கும்,நடக்க போகும்
ஏதுமில்லா பெருவெளியில் எனை நிறுத்தி ..
முடிவற்ற ஒன்றுண்டு
அதன் வலதில் பேசும் நீ..
அதன் இடதில கேட்கும் நான்....

--ஜெயசீலன்

3 comments:

 1. நல்ல கவிதை ...! வாழ்த்துகள்...!!!!!

  ReplyDelete
 2. ஏதுமில்லா பெருவெளியில் எனை நிறுத்தி ..
  முடிவற்ற ஒன்றுண்டு
  அதன் வலதில் பேசும் நீ..
  அதன் இடதில கேட்கும் நான்....

  Lovely... Wonderful Imagination...

  ReplyDelete
 3. ரொம்ப நல்லா இருக்குங்க.

  ReplyDelete