4/30/10

தோழியின் கணவனுக்கு சில குறிப்புக்கள்

கன்னி மரியாளின்
பாதம் தொடும்
பாவனையோடு அவள்
புடவைக்கு மடிப்பெடுக்க முழங்காலிடு.

சரியாகதாணிருக்கும்...
இல்லையென்றாலும்,சரியென்று சொல்
"உப்பு சரியா?" என்று
அன்பை பரிமாறும் அவள் கேள்விக்கு..

சிரித்திறுத்தல் அவள் தாய் மொழி.
தார் பூச மாட்டாள்
எனினும், கண்ணீரை திணிக்காதே..

பௌர்ணமி கடற்கரைகள்
அவள் விருப்பம்.
கை சேர்த்து நட.

எப்போதுமிருக்கும் சொல்ல
அவளிடம் கதைகள்.
சொல்லி சோறூட்ட சொல்.

அவள் தாய்மையின்
உன்னதத்தில்
நீ நம் ஆண்மையின்
ஆயிரமாயிரம் ஆண்டுகளின்
அபத்தங்களை பிழை திருத்து.

அவள் உலகம் சிறியது.
கிட்டதட்ட பால் வீதி பெரிதிருக்கும்.
அதற்குள் அவளை அவளாக சுழலவிடு.

-- ஜெயசீலன்

3 comments:

  1. உள்ளுணர்வைப் புரிந்த தோழன்.

    ReplyDelete
  2. அழகிய கவிதை...!!

    நிஜமாய் தொடுகிறது நெஞ்சை..!

    ReplyDelete