5/9/10

பிடித்த பாடல் வரிகள்( 1 )

எனக்கு ஒழுங்கற்ற அழகின் மீது எப்பொழுதும் ஒரு ஈர்ப்பு உண்டு...குறிப்பாக ஒழுங்கற்ற அழகுடன் உள்ள பெண்களின் மீது நான் மிக இயல்பாக ஈர்க்க படுவதுண்டு..ஒழுங்கற்ற அழகு என்று சொல்லும் போது ஒரு உதாரணம் தருவது உதவும் என்று என்னுகிறேன்.. ஏன்ஜலின ஜோலியின் அழகு ஒழுங்கியலின் அழகு அல்ல,மாறாக ஒழுங்கற்றதின் அழகு...ஜோலியின் முகத்தில் இருக்கும் எதுவும் அழகின் முன் மாதிரியாக பொதுவில் ஒத்து கொள்ளப்பட்ட வடிவத்தை கொண்டிருக்காது..எனினும் அதுவே ஜோலியின் அழகாக எனக்கு படுகிறது...நுட்பமான நவீன ஓவியம் என்று சொல்ல படுவதை காட்டிலும் திடிரென்று தோன்றி மறையும் ஒழுங்கற்ற
மேகங்கள் அழகென தோன்றுவதை போல...ஆனால் என்னுடைய சில நன்பர்கள் ஜோலியின் கழுத்துக்கு கீழான அழகை என்னோடு சேர்ந்து அமோதித்தாலும்,முகத்தை பொறுத்த வரை கடுமையாக என்னோடு முரண் படுவார்கள்.ஒரு பாடல் பிடித்து போவதை போன்றே ஒரு பெண் பிடித்து போவதும் ஒரு அந்தரங்கமான ரசனை சார்ந்ததாக இருக்கலாம்...அப்படி ஒரு அந்தரங்கமான ரசனையாக நான் உணர்வதுதான் சொற்களின் மீதான காதல்...

சமீப காலங்களில் சொற்களின் மீதான காதல் எனக்கு அதிகமாய் கொண்டே போகிறது..சில சொற்களை இசையோடு கேட்கையிலும்,சில சொற்களை சிலர் சொல்ல கேட்கையிலும்,சில சொற்கள் வாசிக்க கிடைக்கையிலும்,சில சொற்களை வெறுமனே எண்னி பார்க்கையிலும் அவை எனக்கு மிக ஆழமான மன அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது...உதாரனமாக நேற்று இரவு ஒரு பெண்ணுடைய கவிதையை படித்து விட்டு அவள் குறித்தான சிந்தனை "கவிதை எழுதுபவள்" என்ற சொற்றொடருக்கு என்னை அழைத்து சென்றது.. "கவிதை எழுதுபவள்" என்பதான மிக சாதாரண இரு வார்த்தைகள் எனக்கு ஏற்படுத்திய அக உணர்வு மிக அலாதியானது.. ஜோலியின் அழகு குறித்தான ஈர்ப்பு போன்றே சில வார்த்தைகளின் மீதான ஈர்ப்பும் எனக்கு மிக அந்தரங்கமான சில மன வாசல்களை திறக்கிறது...

வார்த்தைகளை சார்ந்த என் மனவெழுச்சி அவ்வப்பொழுது சில பாடல் வரிகளை கேட்கும் பொழுது நிகழும்..அதை நான் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் போது நான் முன்பே சொன்னது போல அவை மிக சாதாரண வார்த்தைகள் என பிறர் கடந்து போய்விடுவார்கள்.எனினும் பிடித்த வரிகளை பகிர்ந்து கொள்ளும் தாகம் எனக்கு தனிந்ததே இல்லை...எனவே "பிடித்த பாடல் வரிகள்" என்னும் இந்த தொடர்பதிவை இந்த பதிவில் இருந்து தொடங்குகிறேன்..மீண்டும் ஒரு முறை இது என் அகம் சார்ந்த ஒரு பதிவு என்பதால் உங்களுக்கு இவை சுவாரசியம் மூட்ட தவறலாம் என்று சொல்லி கொள்கிறேன்........

" தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல"

இளையராஜாவின் நிறைய பாடல்கள் என்னை இசையின் உன்னதத்தை உணர வைத்தவை..அவற்றில் "அவதாரம்" படத்தில் வந்த "தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல" என்ற பாடலும் ஒன்று...வாலி எனக்கு பிடித்த பல பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதி உள்ளார்..வாலியின் பாடல் வரிகள் மிகவும் ஒலியின் அழகியல் சார்ந்தவை என்று நான் என்னுகிறேன்..மிக சாதாரண வார்த்தைகளின் கோர்வைகள் இசையோடு சேர்ந்து ஒலிக்கும் போது உன்னத அனுபவம் நோக்கி நகரும் ஆச்சர்யங்களை வாலியின் பல பாடல்களில் நான் அடைந்திருக்கிறேன்...அப்படி போல் அல்லாமல் மிக ஆழ்ந்த கவிதை அனுபவமாக நான் உணர்ந்த வரி தான் " தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல" என்ற வரி.."தி போஸ்ட்மன்" என்ற இத்தாலிய படத்தில் பாப்லோ நெருடா எழுதிய "நடந்து திரிதல்"(walking around) என்ற கவிதையில் வரும் "முடி வெட்டி விடுபவனின் கடை வாசம் என்னை சத்தமிட்டு அழ செய்கின்றன"(The smell of barber shops makes me sob out loud)என்கின்ற வரியை பற்றி பாப்லோ நெருடாவிடமே அந்த கதையின் நாயகன் அதை புரியுமாறு சொல்ல கேட்பான்.அதற்க்கு நெருடா கவிதையை வார்த்தைகளில் விளக்கும் போது அது தான் எழுதிய பொருளில் இருந்து விலகி சென்று விடுவதாகவும்,அதை விட கவிதையை புரிந்து கொள்ள உணர்வுகளின் அனுபவமே உதவும் என்னும் பொருள் பட சொல்வதாய் ஒரு வசனம் வரும்.எனக்கு மிக பிடித்தமான வசனங்களில் ஒன்று.அந்த வசனம் வாலியின் " தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல" என்ற வரிகளுக்கும் முழுதாய் பொருந்தும்.

இப்பாடலை நான் முதல் முறை கேட்ட பொழுது இப்பாடலின் உன்னதத்தை நான் முழுதாக உணரவில்லை..வெகு நாட்களுக்கு பிறகு இந்த பாடலை நான் திரும்பவும் கவனித்து கேட்ட பொழுது நான் அடைந்த இன்பம் ஒரு போதை..இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் இசை ஒரு அடர் திரவ பொருளாக வழிந்து,குலைந்து ஓடுவதான உணர்வே எனக்கு ஏற்படும்..காதலை அடைந்த இருவரின் அக எழுச்சியை பற்றியதான இந்த பாடலை இளையராஜாவும்,வாலியும் ஒரு உன்னத காதல் இசை பாடலாக மாற்றி இருப்பார்கள்..." ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது,நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலுக்குது" என்ற வரிகளும் கூட எனக்கு உன்னதமான கவிதை அனுபவத்தை தந்த வரிகள் தான்.எனினும் அதற்கு இளையராஜாவின் இசையும்,அவரின் குரலும் துணை புரிந்திருக்கும்.அது போல் அல்லாமல் " தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல" என்ற வரி இசையின் குறைந்த பட்ச துணையை கொண்டே மிக ஆழமான மன அதிர்வை எனக்கு தந்தன...

ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும் போதும் நான் நேசித்த பெண்களின் அழகு,பெயர்.கூந்தல்,வாசம்,நினைவு எதுவுமற்று,நான் அவர்களை நேசித்த பொழுது என்னுள் உணர்ந்த பரிசுத்தமான அன்பு மட்டுமே இசை வடிவமாக ஒலிப்பதை உணர்வேன்....

-- ஜெயசீலன்

4 comments:

 1. Hi... Nice Bro. Keep it up.

  ReplyDelete
 2. boss there are quiet a few spelling mistakes...

  ReplyDelete
 3. sorry for the spelling mistakes..i will try to avoid it from the next post...

  ReplyDelete
 4. ”எனக்கு ஒழுங்கற்ற அழகின் மீது எப்பொழுதும் ஒரு ஈர்ப்பு உண்டு - இந்த வரியிலிருந்து ”தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல" என்ற வரி இசையின் குறைந்த பட்ச துணையை கொண்டே மிக ஆழமான மன அதிர்வை எனக்கு தந்தன...” இதுவரை உங்கள் பார்வையும் என் பார்வையும் அப்படியே ஒத்து போகின்றன. பொதுவாக நம் இருவரின் ரசனையை பிறருக்கு உணர்த்துவது கடினம். அதை விளங்க வைப்பதும் கடினம்.... நீங்கள் சொன்ன உதாரணம் ஏஞ்சலினா ஜோலி அதுவும் நமக்கு 100% சார்பு உள்ள உதாரணமே !!!! எதேச்சையாக வர நேர்ந்த இந்த பிளாக்கில் என்னை போன்று அச்சு அசலான ரசனையுள்ள ஒருவரை கண்டு வியப்பாக உள்ளது. நன்றி

  ReplyDelete