10/10/10

அடையாளம் துறப்பதென்பது..

மாட்டிறைச்சியோ, பன்றி இறைச்சியோ
புசிக்க தொடங்குவது..

பகை தேச குழந்தைக்கு
தூங்க கதை சொல்வது..

பால்ய தழும்பின் நுனியில்
பூக்கள் வரைவது..

அந்தரங்க மச்சங்கள் மறைய
பச்சை குத்தி கொள்வது..

மறை நூல்களின் பொருட்டு
கொல்லாமலும்,கொல்லபடாமலும் இருப்பது..

ஏளனித்த உதடுகளை
நன்றி சொல்ல வைப்பது..

ஒரு போலி தலைவனை
படுகொலை செய்வது..

பெண்னென்பது மட்டுமே அறிந்து
ஒருவளை காரிருளில் புணர்வது..

பெயரை கேட்கும்பொழுது
சிரித்துவிட்டு கடந்து செல்வது..

1 comment:

  1. //பெயரை கேட்கும்பொழுது
    சிரித்துவிட்டு கடந்து செல்வது..//

    super. vaalththukkal,

    ReplyDelete