12/19/12

அவள் கூந்தலின் பாடல்கள் 11அந்த திரைப்படம் தொடங்கியபின் 
உன் கூந்தலின் அரங்கினுள் நுழைகிறேன்..
எனது இருக்கை எங்குள்ளது ?

10/3/12

அவள் கூந்தலின் பாடல்கள் 10

என் கனவுகளினாலான மலையை கட்டி
உன் கூந்தலை இழுக்கிறேன்...
வந்தால் மயிர் போனால் மலை..

10/2/12

அவள் கூந்தலின் பாடல்கள் 9

நடுநிசியில் கனவில் 
ஏவாள் தந்த ஆப்பிள்களை
நான் நறுக்கி வைக்க 
காலையில் ஆப்பிள்கள் அனைத்தும் 
உன் கூந்தலாய் மாறியிருந்தது..

அவள் கூந்தலின் பாடல்கள் 8/1

இரையுண்ட அரவமாய்
ஆள் அரவமற்ற உன் கழுத்தில்
உன் கூந்தல் சுருண்டுகிடக்க
பாலை நில பருந்துகலென
பசியோடு அதை சுற்றி பறக்கின்றன
என் கண்கள்..

10/1/12

அவள் கூந்தலின் பாடல்கள் 8

இரையுண்ட அரவமாய் 
ஆள் அரவமற்ற உன் கழுத்தில் 
உன் கூந்தல் சுருண்டுகிடக்க 
கண் கொத்தி பாம்பாய் 
அதை பார்த்து கிடக்கின்றன என் கண்கள்...

9/30/12

அவள் கூந்தலின் பாடல்கள் 7

ஒற்றை கீற்றாய், பேரொளியாய்  
உன் பின்கழுத்தில் அசைந்த 
ஒற்றை வெண்முடியில்    
நிலவற்ற இரவில், கானகத்தில் 
முயலென அலைந்த என் மனதின் கண்கள் 
நிலைகுத்தி நிற்க 
கொன்று வா என்று காமம் 
அன்பை வில்லேற்றி எனை  நோக்கி 
அனுப்பி வைத்தது...

அவள் கூந்தலின் பாடல்கள் 6

கங்கையை சூடிய சிவனென
கருங்கொண்டை பாறையில் 
அருவியாய்
ஒற்றை வெண்முடி சூடியநல் தேவி வாழி