9/30/12

அவள் கூந்தலின் பாடல்கள் 7

ஒற்றை கீற்றாய், பேரொளியாய்  
உன் பின்கழுத்தில் அசைந்த 
ஒற்றை வெண்முடியில்    
நிலவற்ற இரவில், கானகத்தில் 
முயலென அலைந்த என் மனதின் கண்கள் 
நிலைகுத்தி நிற்க 
கொன்று வா என்று காமம் 
அன்பை வில்லேற்றி எனை  நோக்கி 
அனுப்பி வைத்தது...

1 comment:

  1. காம வில் 'கொன்று வா' என்ற கட்டளையுடன் என்னை நோக்கி வந்தால் அது கவிதையின் முறண்பாடு அல்லவோ? கத்துக்குட்டி நான்! கேள்வி அதிகப் பிரசங்கமோ? சீ.புருஷோத்தமன்

    ReplyDelete