6/8/13

இனியாவது குண்டிகளில் சாதி முளைத்த சிம்பன்சிகள் பிரிக்காதிருக்கட்டும்

மனமொத்த இருவர் மணந்து கொள்ள
குண்டிகளில் சாதி முளைத்த
தமிழக சாதி வெறி சிம்பன்சிகளுக்கு
இருப்பு கொள்ளவில்லை
நெருப்பு வைக்கும் வரை...


வெந்து தணிந்தது நாடு
பின்னணியில்
ஆயிரம் ஆண்டுகள் பழைய சாதிய சாக்கடையில்
கண்கள் சிவக்க மொண்டு குடித்து
போதை ஏறி சிம்பன்சி சாத்தான்கள் 

வேதமும் பேதமும் ஓத.

செம்புல பெயல் நீர் போல 

கலந்த அன்புடை நெஞ்சங்களுக்கு
ஒத்தடம் கொடுத்திட வேண்டிய
அன்பை மறுத்து
அந்த நெஞ்சகளை பொரிப்பதா அவிப்பதா
என நரமாமிச ருசியர்கள் கூடி பேசி
தீய எண்ணங்களோடு கூடி புணர்ந்து
சிதைத்தே விட்டார்கள்
கடற்கரையில் இரு குழந்தைகள்
நடந்து போன கால்தடத்தை...


இனியாவது கடவுள் இணைத்ததை
குண்டிகளில் சாதி முளைத்த
தமிழக சாதி வெறி சிம்பன்சிகள் பிரிக்காதிருக்கட்டும்
முயன்றாலும் 
கடவுள் இணைத்தவர்கள்  பிரியாதிருக்கட்டும் ..5 comments:

 1. குண்டியில சாதி முளைக்கிறதும், மதம் முளைக்கிறதும், இனம் முளைக்கிறது அப்புறம் இருக்கட்டும் - முதலில் கல்யாணம் செய்யும் வயது வந்துள்ளதா என்று பாருமய்யா பாணபத்திர ஓணாண்டி...!

  ReplyDelete
 2. மனிதன் என்ற உணர்வும் , எல்லோரும் சமம் என்ற உணர்வும் எப்போது வரும்?
  சாதியை தூக்கி பிடிப்பவர் மனிதனா?
  இவர்கள் படித்து என்ன பயன் ? பிறந்து பிரிவினையை வளர்த்து என்ன கண்டார்கள் ?
  சாதி ஒரு வெட்க கேடான செயல் என்பது இவர்களுக்கு புரியாதா?
  வெட்கமே கிடையாதா...சாதி வேண்டாம் என்று சொல்ல நா எழாதா ?

  ReplyDelete
 3. @ அருள் நான் போன் எடுத்தா ஹில்லரி கிளிண்டன் கிட்ட பேசலாம் அப்படின்னு சொன்னத விடவும் மாவீரன் சாமுராய் செங்கிஸ் கான் காடுவெட்டி குரு சிவனும் பார்வதியும் நம்ம அப்பா அம்மா விஷ்ணு நம்ம சகல அப்படினு சொன்னத விடவும் நான் கன்னசைச்ச கலவரம்தான் அப்படின்னு ராமதாஸ் சொன்னதைவிடவும் 100000 மடங்கு நகைச்சுவை மாநிலம் பயனுற வாழ வல்லமை தாராயோ அப்படின்னு நீங்க பஞ்ச் லைன் வச்சிட்டு இருக்கிறதுதான்...பார்த்த படிச்சவர் மாதிரி இருக்கீங்க ஏங்க நீங்களே எப்படி இருக்கீங்க ? தனிப்பட்ட இருவரின் வாழ்க்கைக்குள் ஏன் அரசியலை நுழைகிறீர்கள்? எனது வேலை 18 வயது தாண்டிய இருவர் சேர்ந்து வாழ முடிவெடுக்கும் போது அவர்களில் ஆணிற்கு ஆண்குறி நல்ல வலுவாக உள்ளதா அந்த பெண்னின் கருப்பை நல்ல நிலையில் உள்ளதா என்று எல்லாம் பார்ப்பது இல்லைங்க..அதுக்குதான் உங்க கட்சியும் கட்சி தலைமையும் இருக்கே 18 வயதிற்கு மேற்பட்ட தனிப்பட்ட இருவரின் முடிவுகளில் போய் மூக்கை நுழைத்து முகர்ந்து பார்க்க...அவர்களிடம் போய் இதை சொல்லுங்கள்...நான் உங்கள் மிது எந்த விதமான கோபமான மன நிலையில் இல்லாமல் அமைதியான மன நிலையில் சொல்கிறேன் சாமுராய் கெங்கிஸ் கான் காடுவெட்டியை மன்னிக்கலாம் அவர் படிக்காதவர் உலகம் அறியாதவர் என்று...ஆனால் உங்களை போன்ற ஆட்கள் மன நலம் குன்றிய ஆறாம் அறிவை கிஞ்சித்தும் பயன்படுத்த மறுக்கும் நச்சு பாம்புகள்..உங்களுக்கு நீங்கள் செய்யும் செயலுக்கு மன்னிப்பே கிடையாது ...

  ReplyDelete
 4. அடுத்தவன் வீட்டுப் பெண் என்பதால் , பதிவிற்கு மேல் பதிவுகள் போடும் அருள், தன் வீட்டுப் பெண் ஓடியிருந்தால் என்ன செய்து இருப்பார்?

  ReplyDelete
 5. Dr: naan phone eadutha clinton kuda pesuvan

  People: Thambi un kaila irukarathu phone illa TV remote

  ReplyDelete