2/19/14

கவிதை எழுதுபவள்

சொற்கள் 
செல்லம் கொஞ்சும் நாய் குட்டியைபோல 
அவளது கன்னத்தை நக்கியபடியே இருக்கிறது.

அந்த சொற்களோடு 
என்ன பேசுவது என்று 
அவளுக்கு தெரிந்திருகிறது.

முதல் முதலாய்
சமைக்கையில் கடுகை தாளித்தவளை போல
சொற்களை வைத்து யாரும் செய்யாததை
தன்னியல்பாய் செய்தபடி இருக்கிறாள்.

சொற்களின் ஊரில்
அவளுக்கு எல்லாமும் தெரிந்திருகிறது..
காலையில் இட்லி வாங்கும் இடம் முதல்
இரவு 11.30க்கு வரும் கடைசி பேருந்து வரை.

சொற்களோடு அவளது பார்வைகளையும்
திகைக்க வைக்கும் உவமைகளையும் சேர்த்து
அழகிய கவிதைகளை நிகழ்த்தி காட்டுகிறாள் .

அவளுடைய கவிதைகள்
அவளிடமிருந்தோ
அவள் சொற்களிடமிருந்தோ வருவதில்லை
அது தனக்குத்தானே நீர் செரியும்
ஒரு அரிய
பூச்செடியிலிருந்து வருகிறது.

அரிவையவள் அரியவள்
கவிதை எழுதுபவள்.

2 comments:

 1. #அரிவையவள் அரியவள்#
  உண்மைதான் , இந்த கவிதையை ஜனிக்கச் செய்தவள் அவள்தானே ?

  ReplyDelete
 2. வணக்கம்
  கவிதையின் வரிகள் மனதை நெருடும் வரிகள் .... வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete